நிறைந்த தவம் செய்த சிறுத்தொண்டருக்கு,
மனை அறத்தின் வேராக விளங்கிய திருவெண்காட்டு நங்கைபால் அவதரித்த மைந்தரின் பெயர்.
மூவாண்டில் முடி நீக்கப்பெற்று, செழுங்கலைகள் பயில, பள்ளியில் இருத்தப் பெற்றார்.
திருமலியில் இருந்து பைரவ வேடத்தில், சிறுத்தொண்டர்தம் மனை சென்ற சிவன் உவப்ப,
அவர் வேண்டியபடி, கறி அமுது அமைக்க, தாயார் மடியில் வைத்துப் பிடிக்க, தந்தையார் கருவி
கொண்டு தலை அரியப் பெற்றவர். தாம் உண்ண, “அவனை நாடி அழையும்” என பயிரவர் சொல்ல,
நாயனார் புறம் போந்து, “மைந்தா, வருவாய்” என அழைக்க, தாயார், “செய்ய மணியே!
சீராளா! வாராய்! சிவனார் யாம் உய்ய, உடன் உண்ண அழைகின்றார்” என்று ஓலமிட,
பள்ளியில் இருந்து ஓடிவருவான் போல வந்த தனிப்புதல்வனை எடுத்து, தழுவி,
களிகூர்ந்தனர். இந்நிலையில் பயிரவரும் மறைந்தார். அவ்விடத்தில் வெள்ளை விடைமேல்
இறைவர், இறைவி, சரவணத்தன் ஆகிய மூவரும், சோமாஸ்கந்த மூர்த்தமாக தொண்டர்,
மனைவியார், மகனார், தாதியார் ஆகியோர் விரைப்பூங்கமலச் சேவடிக்கீழ் என்றும் இருக்க,
உடன் கொண்டு ஏகினார். சீராளதேவர் பயிரவருக்கு பலியிடப் படும்போது படித்த பள்ளி,
திருச்செங்காட்டம் குடியில் இருந்து திருச்சாத்தமங்கைக்கு (incomplete)