மணமேற்குடி

குலைச்சிறை நாயனார் என்னும் கூன்பண்டியனாய் இருந்து, பின் நின்றசீர் நெடுமாற நாயனாராய் இருந்த பாண்டிய அரசனுக்கு மந்திரியாய் இருந்தவன். சமணனாய் இருந்த பாண்டியன் வழியே மக்களும் சமணர்கள் ஆவதைக் கண்டு வருந்திய இவர், பாண்டியனும், அவன் நாட்டு மக்களும் மீண்டும் சிவனருள் பெற, பாண்டியன் மாதேவி, மங்கையர்க்கரசியாருக்கு துணையாக இருந்தவர். திருமறைக்காட்டில் அப்பரோடு தங்கியிருந்த திருஞானசம்பந்தரை மதுரைக்கு வரவழைக்க தேவியாருக்கு உதவி புரிந்தவர். சம்பந்தரோடு சுரவாதம், அனல்வாதம், புனல்வாதம் செய்து, தோற்ற சமணர்களை கழுவேற்றினவருடைய தலம். தஞ்சாவூர் மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் இன்றும் அப்பெயராலே விளங்குகிறது. திருஞானசம்பந்தர் மதுரையில் இருந்து நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசியாரோடுன்று தங்கி, வழிபட்ட சிறந்த ஊர்.

இது ஆவுடையார் கோயில் என்னும் திருப்பெருந்துறையில் இருந்து 16 கி.மீ. தூரம். பயண வசதிகள் உண்டு.