இறைவர் : மாணிக்கவண்ணர், இரத்திரபுரீசுவரர்
இறைவி : மலைமங்கையம்மை
விநாயகர் : கை காட்டிய விநாயகர்
பதிகம் : சுந்தரர் 1
தீர்த்தம் : கலி தீர்த்தம்
சிறிய
கோயில். முழுதும் கருங்கல் திருப்பணி. சில வருடங்களுக்கு முன் நிகழ்ந்த இடி
முழக்கம், பெரு மழையினால் சுவரின் ஒரு பகுதியும், நிலத்தின் ஒரு பகுதியும்
வெடித்துப் பிளந்துள்ளன. சுந்தரரை தம் வீட்டுக்கு அழைத்து, தம் மக்களாகிய
சிங்கடியாரையும், வனப்பதையாரையும் ஏற்றாளும் படி வேண்டினவரும், வேளாண் குடியில்
பிறந்து, விளங்கிய படைத் தலைவரும் ஆகியவரும், இறைவர்க்கு என களஞ்சியத்தில் வைத்து,
போர்க்களம் சென்றிருந்த போது, பஞ்சம் தாங்காத அந்நெல்லை எடுத்த உறவினரை வாளால்
வெட்டித் துணித்தவரும் ஆகிய கோட்புலியார் அவதரித்து, பேறு பெற்ற திருத்தலம்.
தூரத்தே வந்துகொண்டிருந்த சுந்தரருக்கு கோயிலக் காட்டி அருளிய விநாயகர், “கை
காட்டிப் பிள்ளையார்” என வழங்கப் படுகிறார்.
திருவாரூருக்கு
தெற்கே 9½
கி.மீ தொலைவில், திருநாட்டியத்தான்குடி இருப்புப்பாதை நிலையத்தில்
இருந்து 1 கி.மீ.
சோழநாடு,
காவிரி தென்கரை : 118