இறைவர் : வாய்மூர்நாதர்
இறைவி : பாலினும் நன்மொழியாள்நாயகி
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 2 = ஆக 3
சிறிய
கோயில். 3 நிலை இராச கோபுரம். மாடக்கோயில். தியாகேசர் சந்நிதி சிறப்பு. ஏழு
விடங்கத் தலங்களுள் ஒன்று. நீலவிடங்கர். ஆடுவது கமல நடனம். நீலவிடங்கர் சிறிது.
கூடவுள்ள ஸபடிதலிங்கம் அதிற் பெரியது. நாவுக்கரசரும், சம்பந்தரும்
திருமறைக்காட்டிலே மறைகளால் காப்பிடப் பட்ட கதவுத்தினை, நாவுக்கரசர் திறக்கச்
செய்த அருமையையும், சம்பந்தர் பூட்டச் செய்த எளிமையையும் நினைந்து வருந்தியபோது, “திருவாய்மூருக்கு
வா” என்று அழைத்து, இருவருக்கும் காட்சி கொடுத்த தலம். இங்கு ஏழு வைரவ மூர்த்திகள்
ஒரே இடத்தில் உண்டு.
எட்டுக்குடியில்
இருந்து 5
கி.மீ. திருக்கோளிலியில் இருந்து 3 கி.மீ. திருவாரூரில்
இருந்து 24 கி.மீ. பேருந்து வசதிகள் மிகவும் உண்டு.
சோழநாடு,
காவிரி தென்கரை : 124