இறைவர் : நீலாசளேசுவரர்
இறைவி : நீலாம்பிகை
பதிகம் : சம்பந்தர் 1
வடநாட்டுத்
தலம் ஐந்தினுள் இரண்டாவது. இது ஒரு மலை. கோயில் இல்லை. அர்ச்சுனன் தவம் செய்து,
பாசுபதம் பெற்ற தலம். முகாசுரனை வதைத்த தலம். இந்திரன் வழிபட்டதாக சம்பந்தர்
தேவாரத்துள் குறிப்பிடுகிறார். திருக்கேதாரம் செல்லும் வழியில் உள்ளது. தூரத்தே
நின்று வழிபட்டுக் கொண்டு, பயணத்தை தொடர வேண்டும்.
நேபாளத்
தலைநகர் காட்மாண்டுவில் இருந்து 13 கி.மீ. மலைப் பிரதேசம். அடியார்
கூட்டத்தோடு நடந்து செல்ல வேண்டும். யாத்திரிகர்களுக்கு வழிகாட்டியாக பல பயண
நூல்களும், சுதேசிகளும் உளர்.
வடநாடு : 2