இறைவர் : குற்றம்பொறுத்தநாதர்
இறைவி : கோல்வளைநாயகி
பதிகம் : சம்பந்தர் 1
+ சுந்தரர் 1 = ஆக 2
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்
அளவான
கோயில். சீகாழியை ஒத்திருப்பதாலும், சீகாழிக்கு மேற்கே இருப்பதாலும், இதற்கு
மேலைக்காழி எனவும் ஒரு பெயர் உண்டு. கன்பநாசிபுரம் என்றும் வழங்கப் பெரும்.
சீகாழியிற் போல் இங்கும் கட்டுமலைமேல் தோணியப்பரும், தேவியாரும், இன்னும் மேலே
சட்டைநாதரும் எழுந்தருளி உள்ளனர். தக்கன் வேள்விக்கு சென்று, பல்லை இழந்த சூரியன்
இங்குவந்து வழிபட்டு, அதனைப் பெற்றமையால் தலைஞாயிறானான். வழிபடுவோர் குற்றங்களைப்
பொறுப்பவராதலின் இறைவர் “குற்றம் பொறுத்த நாதர்” எனப்படுவர். அகத்தியரின்
கமண்டலத்தை காக வடிவில் விநாயகர் கவிழ்க்க, ஓடிய நீர், இங்கு விநாயக நதியாகப்
பாய்கிறது. கோயில் ‘கொகுடிக்கோயில்’ எனப்படும். கொகுடி – ஒருவகை முல்லை. அது
படர்ந்துள்ள பந்தலும், ஒரு சிவலிங்கமும் திருச்சுற்றில் உள்ளன.
வைத்தீசுவரன்
கோயிலில் இருந்து திருப்புன்கூர் வழியாகவும், திருப்பனந்தாளில் இருந்து
பட்டவர்த்தனம் வழியாகவும் இத்தலத்தை அடையலாம். பயண வசதிகள் மிகவும் உண்டு.
சோழநாடு,
காவிரி வடகரை : 27