8. முழுநீறு பூசிய முனிவர்

முழுநீறு பூசிய முனிவர்கள் சாதியில் தலையானவர்கள். தருமத்தில் சீலமுடையோர். தத்துவநெறி உணர்ந்தோர். தமது கொள்கை நீதி பிழையாத நெறி நின்றோர். நிதம் நியம அங்கியில் (மூவகைப் பட்ட தீயில்) விதிப்படி எடுத்த திருநீற்றைப் புதிய பாத்திரத்தில் கொண்டு சிவனைப் போற்றி, மேனி முழுவதும் அணிவோர்கள்.

திருநீறு பெறும் வகையால், சிவாகமப்படி நான்கு வகைப்படும். (இவற்றுள் அகற்பம் ஆகாது). திருநீறு நித்தம் நியம அக்கினியிலே விதிப்படி கொண்டு, புதிய பாசத்தில் ஏற்கத்தக்கது. திருநீற்றை அணியும்போது, சிவனச் சிந்தித்து, “சிவ சிவ” என்று சொல்லி வணங்கி அணிதல் வேண்டும். பொடியாகப் பூசும்போது உடம்பு முழுவதும் அணியலாம். திருநீறு பெறும் வகையால் நான்கு வகைப்படும். ஈன்றணிமையாகிய பசுவின் சாணத்தை, தேவர்கள் தொழும்படி மேலோங்கி எழுகின்ற சிவமந்திரங்களால் உண்டாக்கப்பட்ட சிவாக்கினியில் இட்டு எடுத்த திருநீறு கற்பம் எனப்படும். கோசலம் விட்டுப் பிசைந்த கோமயத்தினால் உண்டையாகப் பிடித்து, ஓமத்தீயில் இட்டு, வெந்தபின் எடுத்த செல்வத் திருநீறு அகற்பம் எனப்படும். பசு மூத்திரத்தினாலே பிசைந்து எடுக்கப்பட்ட கோமயத்தைத் திருமடங்களிலே விளங்கும் சிவாக்கினியால் நீற்றப்பட்டது உபகற்பம் எனப்படும்; அகற்பம் ஆகாது.

திருநாள் : பங்குனிக் கடைசி நாள்