நம்பியாண்டார் நம்பிகள்

ஆதிசைவர். சோழநாடு. திருநாரையூர். கோயில் அர்ச்சகரின் புதல்வர். அபலகுலசேகர மகாராஜாவின் (இராஜராஜனின்) விருப்பபடி, திருத்தில்லையிலே கனகசபையின் மேற்கே ஒரறையில் திருக்காபிடப் பெற்றிருந்த மூவர் தேவாரத் திருப்பதிகங்களை வெளிக்கொணர்ந்து, செல்லரித்தன போக, எஞ்சியவற்றை ஏழு திருமுறைகளாக வகுத்தவர். திருமுறைகளை பதினொன்றாகத் தொகுத்தவரும் இவரே. சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையைப் பின்பற்றித் திருவந்தாதி பாடி, அதனைப் பதினோராம் திருமுறையில் சேர்த்தவர்.

திருநாள் : வைகாசி - பூரம்