திருச்சேய்ஞ்ஞலூர்

இறைவர் : சத்தியகிரீசுரர், சத்தகிரீசுரர்
இறைவி :

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : மண்ணியாறு

மிகச்சிறிய கோயில். இராசகோபுரம் இல்லை. சிவபெருமான் அறுபத்து மூவரில் இருவரையே பிள்ளையாகக் கொண்டவர். சம்பந்தரை, ஞானப்பால் ஊட்டிய உரிமையால் சேய்ஞ்ஞலூர்ப் பிள்ளை “மிகை செய் தாதைதாள் மழுவால் துணிந்த மறைச்சிறுவர் அந்த உடம்பு தன்னுடனே அரனார் மகனார் ஆனார்”. சூரசங்காரத்தின் பொருட்டு கயிலையில் நின்றும் தேவ சேனையுடன் எழுந்தருளிய போது வழியில் மண்ணியாற்றின் தென்கரையில் ஊர் ஒன்று உளதாக்கி சிவபூசை செய்தருளிய தலம். இங்கு சிவபூசை செய்த காரணத்தால் திருவருள் பெற்றார் என்பதையும் சம்பந்தர் தம் தேவாரத்துள் “சேயடைந்த சேய்ஞ்ஞலூர்” என்றும், “பீரடைந்த பாலதாட்ட” என்ற பாடல்களில் வைத்துப் பாடியுள்ளார். சம்பந்தர் இத்தலத்தை அணுகும்போது, “இது சண்டேசுர நாயனார் அவதரித்த திருத்தலம்” என்று முத்துச் சிவிகையினின்றும் இறங்கிச் சென்று வழிபட்டனர்.

மயிலாடுதுறை-தஞ்சை மார்க்கம் ஆடுதுறை இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 15 கி.மீ. வழியில் திருப்பனந்தாள் தாடகேச்சுரம் திருக்கோயில், திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் முதலியன உள்ளன. சாலைவழிப் பேருந்தில் (மயிலாடுதுறை-கும்பகோணம் வழி பட்டவர்த்தி, வைத்தீஸ்வரன் கோயில்-கும்பகோணம் வழி பட்டவர்த்தி) செல்வதானால் 1 கி.மீ. நடந்து செல்லவேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை : 41