இறைவர் : திருபுராந்தகன்
இறைவி : திரிபுரசுந்தரி
பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : உபாக்கின் தீர்த்தம்
சிறிய
மாடக்கோயில். ஆனால் இராசகோபுரம் இல்லை. சுவாமி தீண்டாத் திருமேனி. கிழக்கு மதிலில்
ஒரு சிறிய திருவாயில் உண்டு. தெற்கு வாயில் வழியாக உள்ளே செல்லலாம். நடேசர்
திருமேனி அழகாக உள்ளது. அம்மன் கோயில் தனியே உண்டு. சுவாமி கோயிலைச் சுற்றி
புறத்தில் ஒரு திண்ணை கட்டப்பட்டுள்ளது. கோயிலின் வெளியே, கிழக்கில் 4 தூண்கள்
தாங்கிக் கொண்டிருக்கும் நீராழி மண்டபத்தோடு ஒரு பெரிய திருக்குளம் உண்டு.
திரிபுரம் எரித்த மூர்த்தியின் திருக்கையில் கோலம் தாங்கிய தலம். அதிகம் மழை பெய்வதாய்
இருந்தால், இறைவர் திருமேனி வெள்ளை நிறமாக மாறும். போர் நிகழுமாய் இருந்தால்
செம்மை நிறம் படரும். திருவூறல் தலம் பக்கத்திலே இருக்கிறது. இரண்டுக்கும் இடையில்
பெரிய ஏரி உண்டு. திருவூறலுக்கு பூசைக்கு திருவிற்கோலத்தில் இருந்துதான்
சிவாச்சாரியார் வந்து செல்வார். கோடை காலமாயிருந்தால் தண்ணீர் இல்லாத ஏரியினூடாக
வருவார். மாரி காலத்தில் தண்ணீர் ஏரியில் உள்ளபோது ஏரியைச் சுற்றயுள்ள பாதையிலே
வந்து பூசனை செய்துவிட்டு திரும்பிச் செல்வார்.
தொண்டைநாடு : 14