இறைவர் : திருத்தளிநாதர்
இறைவி : சிவகாமி
பதிகம் : சம்பந்தர் 1
+ அப்பர் 1 = ஆக 2
தலமரம் : பன்னீர்
தீர்த்தம் : கருட தீர்த்தம், திருத்தளித் தீர்த்தம்
அளவான
கோயில். இங்கு பைரவர் யோகவரைவராக எழுந்தருளி இருக்கிறார். இவருக்கு பூசை
நள்ளிரவில் நிகழுகிறது. அப்போது பொதுமக்கள் யாரும் போகமுடியாது. யாராவது வாசனைத் திரவியம்
பூசிக்கொண்டு சென்றால் மயக்கம் அடைவர். சுவாமிக்கு புனுகு சாத்தினால் மயக்கம்
தெளிவார் என்பர். வைரவருக்கு, சீகாழி சட்டைநாதருக்குப் போல் புனுகு சட்டம் சாத்தி
வழிபாடு நிகழும். நடேசப்பெருமான் சிலை உருவில் எழுந்தருளி யுள்ளார். அம்மையார் காண
அவர் ஆடிய ஏழு தாண்டவங்களில் இங்கு ஆடியது ‘கௌரவ தாண்டவம்’ ஆகும். அகத்தியர்
வழிபட்ட சிவலிங்கம் இங்குள்ள கொன்றை மரத்தின் கீழ் உள்ளது.
பயண
வசதிகள் பல உண்டு. காரைக்குடிக்கு மேற்கே 20 கி.மீ. உள்ள குன்றக்குடியில்
இருந்து மேற்கு 12 கி.மீ. மதுரை முதலிய பல இடங்களில் இருந்து
பேருந்து வசதிகள் உண்டு.
பாண்டிநாடு : 6