திருவிளநகர்

இறைவர் : துறைகாட்டும் வள்ளல்
இறைவி : வேயுறுதோளியம்மை

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. ஆனால் இராச கோபுரம் 5 நிலைகளை உடையது. இறைவரின் பூசைக்காக திருப்பள்ளித் தாமம் கொண்டுவந்த அருள்வித்தன் என்னும் சிவதொண்டர் ஆற்றைக் கடக்கும்போது, ஆற்று வெள்ளம் அவரை அடித்துச் செல்ல, அவர் கையில் இருந்த பூக்கூடையை விடாது இறைவனை தியானித்தார். அப்போது இறைவர் சிவதொண்டரைக் காப்பாற்றியதோடு, ஞானோபதேசமும் செய்தார். இதனாலே அத்தல இறைவருக்கு ‘துறைகாட்டும் வள்ளல்’ எனப் பெயர் ஏற்பட்டது.

மயிலாடுதுறை-பூம்புகார் நெடுஞ்சாலையில் 9 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 40